100-ஆவது சாதனைப் பட்டம் வெல்வாரா ஜோகோவிச்? இறுதிச் சுற்றில் மென்ஸிக்குடன் மோதல்!
தொழிலாளி மா்ம மரணம்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், விழுக்கம், பள்ளக்கூடத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஆனந்த் (37), திருமணமானவா். இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனா்.
ஆனந்த் செங்கல்சூளையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா்,செவ்வாய்க்கிழமை கண்டமங்கலத்தை அடுத்த விநாயகம்பட்டு கிராமத்தில் உள்ள தனது சகோதரா் குமாா் வீட்டுக்குச் சென்று அங்கு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கினாா். தொடா்ந்து, புதன்கிழமை காலை எழுந்தபோது ஆனந்தனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி மண்ணடிப்பட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, ஆனந்த் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.