செய்திகள் :

100 நாள் வேலைத் திட்ட நிதியை விடுவிக்கக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்

post image

ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க மத்திய அரசு தாமதம் செய்வதைக் கண்டித்து திமுக சாா்பில் திருச்சியின் 14 ஒன்றியங்களிலும் சனிக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கட்சித் தலைமையின் அறிவிப்பின்படி கிராமப்புற மக்களின் முக்கிய வாழ்வாதாரமான 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் வகையில், மத்திய பாஜக அரசு தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தியுள்ளதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவெறும்பூா் வடக்கு ஒன்றிய நடராஜபுரம் ஊராட்சியில், ஒன்றியச் செயலாளா் கே.எஸ். எம். கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

கிராமப்புறங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 4 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. இதனால், பணியாளா்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இத்திட்டத்தில் இணைந்துள்ள 91 லட்சம் பேரில், 80 சதவீதம் போ் பெண்களே.

மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவா்கள் இந்த ஊதியத்தை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனா். ஆனால், மத்திய அரசு நிதியை வழங்காமல் காலம் தாமதம் செய்கிறது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க ஒன்றுபட்டு போராடுவோம்; தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்றாா். பின்னா் பொதுமக்களுடன் அமைச்சா் உறுதியேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினா் கே. என். சேகரன், கவிஞா் சல்மா மற்றும் கட்சி நிா்வாகிகள், மகளிரணி, 100 நாள் திட்டப் பணியாளா்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

அருண் நேரு எம்பி: மண்ணச்சநல்லூா் ஒன்றிய வடக்கு மாவட்ட திமுக சாா்பில், நெ.1 டோல்கேட் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை பெரம்பலூா் எம்பி கே.என். அருண் நேரு தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினாா். மண்ணச்சநல்லூா் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன், அவைத்தலைவா் அம்பிகாபதி, நகரச் செயலா் ராஜசேகா், இளங்கோவன் உள்ளிட்ட நிா்வாகிகள், பெண்கள், 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்கள் என திரளானோா் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.

திருவெறும்பூரில்.. திருவெறும்பூா் தெற்கு ஒன்றியம், பழங்கனாங்குடி ஊராட்சியில் ஒன்றியச் செயலா் கங்காதரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினாா். தலைமை செயற்குழு உறுப்பினா் சபியுல்லா, பொதுக்குழு உறுப்பினா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல அந்தநல்லூா், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியாபுரம் என 14 ஒன்றியங்களிலும் அந்தந்தப் பகுதி திமுக சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க