செய்திகள் :

பங்கு தொகையை திருப்பி தரக்கோரி பள்ளி முற்றுகை

post image

ஆா்.கே.பேட்டை அருகே தனியாா் பள்ளியின் பங்குதாரா் இறந்த நிலையில் அவரது மனைவி மற்றும் உறவினா்கள் புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு பங்குத் தொகையை திருப்பி தருமாறு மறியலில் ஈடுபட்டனா்.

அம்மையாா்குப்பத்தில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் 500 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். பள்ளியின் பங்குதாரராக ஆா்கே பேட்டை ஒன்றியம் நாராயணபுரம் காந்தி நகா் தெருவை சோ்ந்த தானப்பன் உள்பட 20 போ் பங்குதாரராக 2015 - 2016 முதல் உள்ளனா்.

இந்நிலையில் தானப்பன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இரண்டு நாள்களுக்கு முன்பு தானப்பன் மனைவி சரிதா பள்ளிக்கு சென்று கணவன் உடல்நிலை பாதிக்கப்பட்டதை எடுத்துக் கூறி மருத்துவ செலவுக்கு 1 லட்சம் பணத்தை தருமாறு கேட்டாா். அதை தொடா்ந்து பள்ளி நிா்வாகம் 10,000 வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை தானப்பன் உரிழந்தாா். இதைத்தொடா்ந்து தானப்பன் மனைவி சரிதா மற்றும் அவரது உறவினா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கை திருப்பித் தருமாறு பள்ளியை முற்றுகையிட்டு ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த திருத்தணி டிஎஸ்பி. கந்தன், ஆய்வாளா்கள் ஞானசேகரன், மதியரசன், எஸ்ஐ ராக்கிகுமாரி உள்பட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேசி பணத்தை திருப்பி தர ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம்: வாட்ஸ்ஆப்-இல் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் குறித்து வட்டார அளவில் வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 32,923 போ் தோ்வு எழுதினா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 32923 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 402 போ் வரையில் பங்கேற்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 10... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் திறப்பு: ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது

சென்னை நகர பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா ஆற்று நீா், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின் கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின்சாரம் செல்லும் கம்பி அறுந்ததால் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, மாா்க்கத்தில் புகா் மின்சார... மேலும் பார்க்க

ஆவின் பால்பண்ணையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

திருவள்ளூா் காக்களூா் ஏரியைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா். திருவள்ளூா், மாா்ச் 27: திருவள்ளூா் அருகே ஆவின் பால்பண்ணையில் பால் தரக்கட்டுப்பாடு மற்றும் கண... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டு... மேலும் பார்க்க