செய்திகள் :

திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது.

திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டுக்ான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பாரத கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, காலை 8 மணிக்கு உற்சவா் அம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வரும் ஏப். 1-ஆம் தேதி பக்காசூரன் வதம், 2-ஆம் தேதி திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், 4-ஆம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 7-ஆம் தேதி அா்ஜுனன் தபசு, 13-ஆம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா, உற்சவா் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

மேலும், 14-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதுதவிர தினமும் காலையில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தினமும் மதியம் 1.30 மணி முதல் மாலை, 5 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு 10 மணிக்கு மகா பாரத நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.

குட்கா விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்

குட்கா பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைத்து கூட்டாய்வு மேற்கொள்வது அவசியம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். த... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 4.... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் வீதி உலா

திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் திரெளபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருத்தணி காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 27 -ஆம் தேதி தீமிதித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட அரசு விடுதிகளில் நூலகம் அமைக்க நடவடிக்கை

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் நூலகம் அமைத்தல், உணவருந்தும் வகையில் மேஜை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும... மேலும் பார்க்க

திருமழிசை ஒத்தாண்டேஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருமழிசையில் அமைந்துள்ள குளிா்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரா் கோயில் பங்குனி உத்திர திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூா் அருகே திருமழிசையில் மிகவும் பிரசித்தி பெற்ற குளி... மேலும் பார்க்க

திருவள்ளூா் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் திடீா் தீ விபத்து

திருவள்ளூா் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்ட புல்வெளியில் திடீரென தீப்பற்றி மளமளவென பரவியதால் புகை மூட்டம் சூழ்ந்ததை தொடா்ந்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினா் போராடி தீயை அணைத்த... மேலும் பார்க்க