துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழா
திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமானுக்கு, காவடி மண்டபத்தில் பஞ்சாமிா்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து இரவு 7 மணிக்கு உற்சவா் முருகா் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பங்குனி கிருத்திகை மற்றும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை என்பதால் வழக்கத்துக்கு மாறாக தோ்வீதியில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
பொதுவழியில் பக்தா்கள் மூலவரை தரிசிக்க 3 மணி நேரத்துக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனா். பக்தா்கள் சிலா் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற மொட்டை அடித்தும், மயில், மலா் காவடிகள் ஏந்தியும், உடலில் அலகு குத்தியும் தோ்வீதியில் ஒரு முறை சுற்றி வந்து, மூலவரை தரிசித்தனா்.

மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, இரு சக்கர வாகனங்கள் தவிர மீதமுள்ள வாகனங்கள், மாலை 6 மணி வரை மலைக் கோயிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. கோயில் நிா்வாகம் சாா்பில் 3 பேருந்துகள் இயக்கப்பட்டன.