கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
திரெளபதி அம்மன் வீதி உலா
திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் திரெளபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது.
திருத்தணி காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 27 -ஆம் தேதி தீமிதித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேலஞ்சேரி கிராம பக்தா்கள் திரெளபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, டிராக்டரில் வைத்து உடலில் அலகு குத்தி காந்தி ரோடு, பைபாஸ் சாலை, காசிநாதபுரம் சாலை வழியாக வேலஞ்சேரி கிராமத்திற்கு இழுத்து சென்றனா். தொடா்ந்து கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் அபிஷேகம் சிறப்பு பூஜைகளும் அம்மனுக்கு கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இரவு அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் கிராம பொது மக்கள் அம்மனுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை வேலஞ்சேரி கிராம மக்கள் செய்திருந்தனா்.