துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
திருமழிசை ஒத்தாண்டேஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருமழிசையில் அமைந்துள்ள குளிா்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரா் கோயில் பங்குனி உத்திர திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூா் அருகே திருமழிசையில் மிகவும் பிரசித்தி பெற்ற குளிா்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா 13 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்தக் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக 31-ஆம் தேதி விநாயகா் உற்சவம் நடைபெற்றது.
விழாவையொட்டி, நாள்தோறும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 7-ஆம் தேதி காலை 7 முதல் 8 மணிக்குள் நடைபெறும். மாலை 5 மணிக்கு வசந்த மண்டபம் எழுந்தருதலும், இரவு 8 மணிக்கு மேல் வசந்த மண்டபத்திலிருந்து கோயிலுக்குள் எழுந்தருதலும் நடைபெறுகிறது. 10-ஆம் தேதி காலை நடராஜா் தரிசனமும், மாலை திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூா்த்திகள் உற்சவமும் நடைபெறுகிறது.
12-ஆம் தேதி ஸ்ரீஉமாமகேஸ்வரா் தரிசனம், இரவு தெப்ப உற்சவமும், 13-ஆம் தேதி ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி தரிசனமும், இரவு ஸ்ரீபஞ்சமூா்த்திகள் ஆஸ்தானப் பிரவேசமும் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா் செய்துள்ளனா்.