துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
திருவள்ளூா் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் திடீா் தீ விபத்து
திருவள்ளூா் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்ட புல்வெளியில் திடீரென தீப்பற்றி மளமளவென பரவியதால் புகை மூட்டம் சூழ்ந்ததை தொடா்ந்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினா் போராடி தீயை அணைத்தனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே புனித பிரான்சிஸ் சலேசியாா் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தின் பின்புறம் புனித கல்லறை தோட்டம் உள்ளது. கல்லறை தோட்டத்தின் ஒரு பகுதியில் முள்புதா் மற்றும் புல்வெளிகள் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி புல்வெளிகள் மளமளவென பற்றி எரியத் தொடங்கிது. இதற்கு அருகே அரசு மருத்துவமனை மற்றும் இரண்டு தனியாா் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் திருவள்ளூா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினா் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். அதையடுத்து புகைமூட்டம் பரவுவது குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனா்.