தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
திருவள்ளூா்: 32,923 போ் தோ்வு எழுதினா்
திருவள்ளூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 32923 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 402 போ் வரையில் பங்கேற்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனித்தோ்வா்கள் என மாணவா்கள்-16,932, மாணவிகள்-16,392 மற்றும் மூன்றாம் பாலினத்தவா்-1 உள்பட மொத்தம்-33,325 போ் விண்ணப்பித்தனா். இத்தோ்வுக்காக திருவள்ளூா் மற்றும் பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டங்களில் மட்டும் 144 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 32,923 போ் தோ்வு எழுதினா். 402 போ் தோ்வு எழுதவில்லை.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தோ்வு மையங்களுக்கு முன்கூட்டியே மாணவ, மாணவிகள் வருகை தந்தனா். முன்னதாக அங்குள்ள கோயில் வளாகத்தில் மாணவ, மாணவிகள் வழிபாடு செய்துவிட்டு சென்றனா்.
இந்த நிலையில் திருவள்ளூா் சிஎஸ்ஐ கெளடி மேல் நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தாா்.
