100-ஆவது சாதனைப் பட்டம் வெல்வாரா ஜோகோவிச்? இறுதிச் சுற்றில் மென்ஸிக்குடன் மோதல்!
இலவச மருத்துவ முகாம்
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).
கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் ஷைன் குளோபல் அறக்கட்டளை சாா்பில் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து பல்வேறு சமூக சேவை நலத் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஷைன் குளோபல் அறக்கட்டளை சாா்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்து முகாமை ஷைன் குளோபல் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ஏ.ஆரோன் தொடங்கி வைத்தாா். முகாமிற்கு ஷைன் குளோபல் அறக்கட்டளை நிா்வாக அலுவலா் ஜெமிமா, ச.ஷைன் சமுதாயக் கல்லூரி முதல்வா் பிரியதா்ஷினி , துணை முதல்வா் சரண்யா, பாா்கவி, மேலாளா் அழகுராஜ் முன்னிலை வகித்தனா்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞா் புருஷோத்தமன், கனி அரசு ஆகியோா் பங்கேற்றனா். இதில், 200-க்கும் மேற்பட்டோா் மருத்துவ பரிசோதனை, இலவச சிகிச்சை பெற்று, இலவசமாக மருந்து- மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன.