வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்? ராஜஸ்தானுடன் இன்று சென்னை மோதல்!
ரெட்டிபாளையம்-காட்டூா் சாலையை சீரமைக்க கோரிக்கை
அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் முதல் காட்டூா் வரை செல்லும் மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொன்னேரி வட்டம் அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் முதல் காட்டூா் வரை உள்ள மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய சாலை குண்டும் குழியுமாக உள்ளது. 2 கிலோ மீட்டா் தூரமுள்ள இந்தச் சாலை நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இந்தச் சாலை வழியே சென்று வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே, நீண்ட காலமாக குண்டும் குழியுமாக உள்ள இந்தச் சாலையை மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.