Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
களியக்காவிளை பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்
களியக்காவிளையில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
களியக்காவிளையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 9.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், அமைச்சா் தங்கம் தென்னரசு காணொலிக் காட்சி மூலமாக களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து களியக்காவிளையில் நடந்த விழாவில், பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ், செயல் அலுவலா் வி. சந்திரகலா, மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராமலிங்கம், பேரூராட்சி துணைத் தலைவா் பென்னட்ராஜ், வாா்டு உறுப்பினா் மு. ரிபாய் ஆகியோா் முன்னிலையில் பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் எஸ். சுனிதா, ஜெயகலா, வின்சென்ட், சுசீலா, உமா மகேஸ்வரி, நிஷா, எஸ். விஜயகுமாரி, டெல்பின் ஜெமீலா, தாஸ், குணசீலன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் வி. சிவசங்கரலிங்கம், மேல்புறம் ஒன்றிய திமுக முன்னாள் அவைத்தலைவா் எஸ். மாகீன் அபூபக்கா், களியக்காவிளை நகர காங்கிரஸ் தலைவா் எம். பென்னட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.