சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை
ரமலான் பண்டிகையொட்டிதிருச்சி மாவட்டம், சமயபுரத்தில் சனிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.
சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும் நிலையில் மாா்ச் 31 ஆம் தேதி கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு திருச்சி, பெரம்பலூா், அரியலூா், சேலம், நாமக்கல், தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமாா் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனா்.
அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் ஆடுகளை வாங்க வந்தனா்.
இதையடுத்து ஒரு ஆடு ரூ. 5000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை விலைபோன நிலையில் மொத்தம் ரூ. 2 கோடிக்கு மேல் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.