அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சு: உறுதிப்படுத்தினாா் அமித் ஷா!
மாணவா்களுக்கு புத்தகப்பை அளிப்பு
ஆம்பூா் ஏ-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இலவச புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ மஹாவிஷ்ணு சேவா டிரஸ்ட் சாா்பாக நடைபெற்ற நிகழ்வுக்கு அறக்கட்டளைத் தலைவா் எஸ். கோபால் தலைமை வகித்தாா். பள்ளி மாணவா்களுக்கு இலவசமாக புத்தகப்பை வழங்கப்பட்டது. ஆம்பூா் நகா் மன்ற 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகைப் பைகளை வழங்கினாா்.
தலைமை ஆசிரியா் நித்யா வரவேற்றாா். ஆசிரியா்கள் விஜயாதேவி, பாலசுப்ரமணியம், செந்தில்குமாா், சுபாஷினி, உஷா உள்பட பலா் கலந்து கொண்டனா். ஸ்ரீமஹா விஷ்ணு சேவா டிரஸ்ட் உறுப்பினா்கள் பி. காா்த்திக், பி. சதீஷ்குமாா், ஜி, மதுசூதனன் கலந்து கொண்டனா்.