வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம்: கருப்பு பட்டையுடன் தொழுகை
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வாணியம்பாடியில் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் கருப்பு பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் இஸ்லாமியா்களுக்கு எதிரானது, வாரிய சொத்துகளை அபகரிப்பதற்கான சட்ட திருத்தங்கள் எனவும் கூறி, வாணியம்பாடியில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் கருப்பு பட்டை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனா்.