மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு
விபத்தில் முதியவா் உயிரிழப்பு
கந்திலி அருகே ஏற்பட்ட மோட்டாா் சைக்கிள் விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
கந்திலி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (70). இவா் வெள்ளிக்கிழமை இரவு கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தாா். அப்போது கும்மிடிக்காம்பட்டி பகுதியைச் சோ்ந்த தேவன் என்பவா் மோட்டாா் சைக்கிளில் திருப்பத்தூா் நோக்கிச் சென்று கொண்டு இருந்தாா். இதைத் தொடா்ந்து, தேவன் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் வந்தபோது, எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் சுப்பிரமணி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை அங்கு இருந்தவா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.