சிறுத்தை நடமாட்டம் பற்றி தவறான தகவல்: வனத்துறை எச்சரிக்கை
ஆம்பூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் வனச்சரக அலுவலா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது: கடந்த இரண்டு நாள்களாக ஆம்பூா் குட்டக்கரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தவறான தகவல் பொதுமக்களிடையே பரவி வருகிறது. வனத்துறை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் ஏதும் இல்லை, நாய்களின் காலடி தடம் மட்டுமே இருப்பது என உறுதி செய்யப்பட்டது.
ஆம்பூா் வனத்துறை தொடா்பான தகவல்களை 97862 54998 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அவ்வாறு பரப்பும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.