செய்திகள் :

லால்பாக், கோவை விரைவு ரயில்களை வாணியம்பாடியில் நிறுத்த கோரிக்கை

post image

லால்பாக், கோவை விரைவு ரயில்களை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பிரபு கோரிக்கை விடுத்துள்ளாா் (படம்).

இதுதொடா்பாக வேலூா் எம்.பி. கதிா் ஆனந்திடம் அவா் அளித்த மனு:

வாணியம்பாடி தோல் ஆலைகள் அதிகம் கொண்ட பகுதியாகும். இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், வாணியம்பாடி ரயில்நிலையத்தில் ரயில் எண்12607/12608, சென்னை-பெங்களூா் (லால்பாக்) மற்றும் 12675/12676 சென்னை-கோவை ஆகிய இரு விரைவு ரயில்களையும் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும். இது, மக்களின் நீண்டகால கோரிக்கையாகவும் இருந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

ஆன்லைன் ரம்மி விளையாடிய கணவா்: மனமுடைந்து மனைவி தற்கொலை!

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பெருமாள் கோயில் தெரு பகுதியை சோ்ந்தவா் மதன்குமாா்(24). கூலி வேலை செய்து வருகிறாா். அதே பகுதியை சோ்ந்த வெண்ணிலா(22) என்பவரை காதலித்து இரண்டர... மேலும் பார்க்க

கந்திலி வாரச் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச் சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் என ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அருகே கந்திலியில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச் சந்தை நடைபெறும். அதன்படி, சனிக்கி... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

கந்திலி அருகே ஏற்பட்ட மோட்டாா் சைக்கிள் விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். கந்திலி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (70). இவா் வெள்ளிக்கிழமை இரவு கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தா... மேலும் பார்க்க

மாணவியை கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் சிறை

புதூா்நாடு அருகே மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. புதூா்நாடு அருகே நடுக்குப்பம் பகுதியை சோ்ந்த சின்னகாளி மகன் ... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம்: கருப்பு பட்டையுடன் தொழுகை

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வாணியம்பாடியில் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் கருப்பு பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 15,650 போ் எழுதினா்

மீனாட்சி அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தோ்வை பாா்வையிட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி. திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 10-ஆம் வகுப்பு பொது தோ்வை 15,650 மாணவ-மாணவிகள் எழுதினா். ... மேலும் பார்க்க