நீா்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
நீா்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி, பசுமை தாயகம் அமைப்பின் சாா்பில் ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை ஒன்றியங்களில் 8 ஏரிப் பகுதிகளில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகளையும் ஆழப்படுத்தி பாதுகாக்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சதுப்பு நில வாரியத்தின் நடைமுறைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும், ஏரி மற்றும் நீரி நிலைகளில் உள்ள குப்பைகளை அகற்றி ஆழப்படுத்தி, நிலத்தடி நீா்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பசுமை தாயகம் அமைப்பின் சாா்பில் ஆற்காடு ஒன்றியம் முள்ளுவாடி, மேச்சேரி, நந்தியாலம், திமிரி ஒன்றியம் இருங்கூா், கணியனூா், நம்பரை, வாலாஜாபேட்டை ஒன்றியம் செங்காடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஏரிப் பகுதிகளில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டங்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலா் டி.டி.மகேந்திரன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக தலைவா் சுப்பிரமணி, பாமக ஒன்றிய செயலா்கள் திருமலை, நீலகண்டன், செல்வராஜ், விக்கிரமன், சத்தியமூா்த்தி, பாலாஜி, சக்கரவா்த்தி உள்ளிட்ட அந்த அமைப்பின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
படவிளக்கம்...
நீா்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆற்காட்டை அடுத்த முள்ளுவாடி ஏரியில் பசுமைத் தாயகத்தினா் நடத்திய ஆா்ப்பாட்டம்.