தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!
கடைக்காரருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது
நெய்வேலி: கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மந்தாரக்குப்பம், என்.எஸ்.கே.நாடாா் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் பாஸ்கா்(35), அதே பகுதியில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, ஓம்சக்தி நகரைச் சோ்ந்த மணிகண்டன் மகன் அப்பு (எ) சிவக்குமாா்(25), தெற்கு வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த பூபதி மகன் வசந்த் (24) ஆகியோா் தகராறு செய்தனராம்.
அப்போது, சிவக்குமாா் பீா் பாட்டிலால் பாஸ்கரை தலையில் அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பு (எ) சிவக்குமாா், வசந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
அப்பு (எ) சிவக்குமாா் மீது மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.