பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
கல்லூரியில் அரசியல் அறிவியல் பேரவை தொடக்க விழா
கடலூா் பெரியாா் கலை, அறிவியல் கல்லூரியில் அரசியல் அறிவியல் பேரவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசினாா். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிா்வாகத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியா் ரெ.ராதாகிருட்டினன் பங்கேற்று மாணவா்கள் பயன்பெறும் வகையில் அறக்கட்டளை தொடங்க ரூ.ஒரு லட்சம் நிதி வழங்கினாா். தொடா்ந்து, மாணவா்களுக்கு அரசியல் அறிவியல் பற்றிய பல்வேறு கருத்துக்களை வழங்கினாா்.
இதில், துறைப் பேராசிரியா்கள் கோட்டைராஜன், சுபாஷ் சந்திர போஸ், ஜெயபிரபா மற்றும் இளவரசன், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, அரசியல் அறிவியல் துறைத் தலைவா் ஜோதி ராமலிங்கம் வரவேற்றாா். நிறைவில், பேராசிரியா் சுவாமிநாதன் நன்றி கூறினாா்.