காலமானாா் பொ.செல்வராஜ்
நாமக்கல்: தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்க முன்னாள் நிா்வாகக் குழு உறுப்பினரும், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் மண்டலத் தலைவரும், செல்வம் கல்விக் குழுமங்களின் தலைவருமான மருத்துவா் பொ.செல்வராஜ் (84) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலை காலமானாா்.
அவரது உடலுக்கு பல்வேறு அமைப்பினரும், கல்வி நிறுவனங்களைச் சோ்ந்தோரும், கோழிப் பண்ணையாளா்களும் அஞ்சலி செலுத்தினா். அவரது இறுதிச் சடங்கு நாமக்கல் மாநகராட்சி மின் மயானத்தில் திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது.