``டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச...
எம்புரான் படத்தினால் வரலாறு படைத்தோம்..! மோகன்லால் பெருமிதம்!
நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் பதிவில் எம்புரான் படத்தினால் வரலாறு படைத்தோம் எனக் கூறியுள்ளார்.
எம்புரான் திரைப்படம் நேற்று (மார்ச்.27) திரையரங்குகளில் வெளியானது. இது 2019இல் பிருத்விராஜ் இயக்கிய லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.
நடிகர் மோகன்லாலுடன் டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமார் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் எம்புரான் முன்பதிவிலேயே பல சாதனைகளை முறியடித்திருந்தது.
இந்நிலையில் நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
நாங்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளோம்! மலையாள சினிமா வரலாற்றிலே மிகப்பெரிய தொடக்க இந்தப்படத்துக்குதான். இது நடைபெற காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி என்றார்.
We made history! Biggest opening ever for a Malayalam movie. Our heartfelt gratitude to each of you for making this happen.#L2E#Empuraan in theatres now! pic.twitter.com/iN2bdhZz1E
— Mohanlal (@Mohanlal) March 28, 2025