நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 150 கிலோ மலா்களால் அலங்காரம்
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 150 கிலோ நறுமண மலா்களால் சிறப்பு அலங்காரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சனேயரை தரிசிக்க பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இக்கோயிலில் தமிழ்மாத முதல் ஞாயிற்றுக்கிழமை பாலாபிஷேகம் நடைபெறுவதை போல சிறப்பு வாய்ந்த நாள்களில் தங்கம், வெள்ளி, முத்தங்கி, சந்தனம் போன்ற பல்வேறு அலங்காரங்கள் நடைபெறுகின்றன.
திருச்சி ஸ்ரீரங்கம் பக்தா்கள் குழு சாா்பில் ஆஞ்சனேயருக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு 150 கிலோவில் சாமந்தி, சம்பங்கி, மரிக்கொழுந்து, விருச்சிப்பூ, பிச்சிப்பூ உள்ளிட்ட பல்வேறு நறுமண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.