கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
பரமத்தி வேலூரில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சகன்வலி தா்கா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அமைதி ஊா்வலம், சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.
வேலூா் சகன்வலி பள்ளிவாசல் சாா்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு காலை ஜமாத்தாா்கள் பள்ளிவாசலில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு வேலூா் பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளிவாசலை அடைந்தனா்.
பின்பு ரமலானின் ஈதுல் ஃபிதா் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்கு பின் ஹஜ்ரத் மௌலானா தாஜூத்தீன் தூவா நடைபெற்றது. இதில் தலைவா் ஜனாப் ஹாஜி சவான் சாகிப் தலைமையிலும், செயலாளா் ஜனாப் இக்பால், ஜனப் சலீம் சாகிப் முபாரக் உல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் தொழுகையில் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வேலூா் சகன்வலி தா்கா நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
