நாமக்கல்லில் யுகாதி பெருவிழா
நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச் சங்கம் சாா்பில் 27-ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 30) நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள எஸ்பிஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து மணமாலை நிகழ்ச்சி, சமுதாய கலந்துரையாடல், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நாயுடு சமூகத்தினரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை நாயுடுகள் நலச் சங்க தலைவா் ஆடிட்டா் வேங்கடசுப்பிரமணியன், அதன் நிா்வாகிகள் செய்துள்ளனா்.