செய்திகள் :

``அந்த அறையில் பணம் வைத்ததே இல்லை!'' - தன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் குறித்து நீதிபதி பதில்

post image

கடந்த வாரம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவர் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. இதனால், தீயணைப்பு துறையின் உதவியை நாடியுள்ளது அவரது குடும்பம்.

தீயணைப்பு முடித்ததும், தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டில் கட்டு கட்டான பணத்தை கண்டுள்ளனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிகப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேச கூடிய இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கூட்டத்தில், 'யஷ்வந்த் வர்மா முன்பு வேலை பார்த்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே, அவரை மீண்டும் பணி மாறுதல் செய்வதற்கும், அவர் மீது விசாரணை நடத்திடவும்' முடிவு செய்யப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய்
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய்

விளக்கக் கடிதம்

சம்பவம் குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய்யிடன் நீதிபதி யஷ்வந்த் வர்மா கொடுத்த விளக்கக் கடிதத்தில், "பணம் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட அறை அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு அறை ஆகும். பயன்படுத்தாத நாற்காலிகள், பாட்டில்கள், பாத்திரங்கள், தோட்டக் கருவிகள் ஆகியவற்றை போட்டு வைக்கும் அறை ஆகும்.

அது ஒரு பூட்டப்படாத அறை. அந்த அறைக்கு முன்பக்க கதவு மூலமும், பணியாளர்கள் குடியிருப்பிற்கு பின் இருந்தும் வந்துப்போக முடியும். அதனால், இது என்னுடைய வீட்டின் அறை என்று கூறப்பட்டது போல இல்லை.

ஊரில் இல்லை!

இந்த சம்பவம் நடந்தப்போது நானும், என் மனைவியும் மத்திய பிரதேச சென்றிருந்தோம். என்னுடைய மகள் மற்றும் வயதான அம்மா மட்டுமே வீட்டில் இருந்தனர். மார்ச் 15-ம் தேதி தான், என் மனைவியுடன் டெல்லிக்கு திரும்பினேன்.

தீ விபத்து நடு இரவில் நடந்தபோது, என்னுடைய மகள் மற்றும் என்னுடைய தனி செயலாளர் இருவரும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தீயை அணைக்க, என் குடும்ப உறுப்பினர்களை வெளியில் இருக்க கூறியுள்ளனர் தீயணைப்பு வீரர்கள். தீயணைப்பு முடிந்து, அவர்கள் வீட்டிற்குள் வந்தப்போது, அப்படி எந்தவொரு பணத்தையும் என் குடும்பத்தினர் பார்க்கவில்லை.

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட எரிந்த பணக்கட்டுகள்
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட எரிந்த பணக்கட்டுகள்

நம்ப முடியாத ஒன்று

நானோ, என் குடும்ப உறுப்பினர்களோ யாரும் அந்த அறையில் இதுவரை எந்த பணத்தையும் வைத்ததில்லை. அதனால், அந்தப் பணம் என்னுடையது என்று கூறுவதை முற்றிலும் மறுக்கிறேன். பூட்டப்படாத, அனைவரும் வந்துப்போகும், திறந்த ஒரு அறையில் பணத்தை வைப்பது என்பது நம்ப முடியாத ஒன்று.அந்த அறைக்கும் எனது வீட்டிற்கும் சம்பந்தமே இல்லை.

விசாரணை வேண்டும்

என்னுடைய பெயரைக் கெடுக்கவே இப்படி ஒரு சம்பவம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த மாதிரியான எந்தப் புகாரும், சந்தேகமும் என் மீது முன்னர் வந்ததில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வீடியோவை தற்போது இந்திய தலைமை நீதிபதி மற்றும் டெல்லி கமிஷனர் வெளியிட்டுள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Kerala: ``நாட்டுக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர்..'' - SFI பேனரால் ஆவேசமான கேரள கவர்னர்

கேரள மாநிலத்தில் இப்போதைய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும், ஆளும் சி.பி.எம் அரசும் இணக்கமாக உள்ளது. கடந்த வாரத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, கேரள கவர்னர் மற்றும் முதல... மேலும் பார்க்க

2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடிகள்; பறிபோன ரூ.4,245 கோடி! - RBI நடவடிக்கை என்ன?

2024-25 நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், 2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ரூ.4,245 கோடி பறிபோய் உள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டில், 2.8 மில்லியன் வழக்குகளில் ரூ. 4,40... மேலும் பார்க்க

``உங்களுக்கு ஏளனமாக உள்ளதா?'' - நிதிப் பகிர்வு குறித்து நிர்மலா பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

'கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கு சென்னையும், கோவையும் தான் அதிக வரி கொடுக்கின்றது. அரியலூர் மற்றும் கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், சென்னை... மேலும் பார்க்க

``சென்னையும், கோவையும் `இப்படி' கேட்டால் என்ன செய்வது?'' - நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?

சென்னையில் நேற்று மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படும் வரிகள் குறித்து பேசினார். அதில்,"தமிழ்நாட்டில்,... மேலும் பார்க்க

Fair Delimitation: ``தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்..'' -கனிமொழி எம்.பி

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்தி... மேலும் பார்க்க

Fair Delimitation: 7 மாநில முதல்வர்களின் அரசியல் உரைகள்; முன்வைத்த முக்கிய கருத்துகள் என்ன?

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்தி... மேலும் பார்க்க