மஹிந்திராவின் புதிய மின்சார கார்! ஒருமுறை சார்ஜ் செய்தால் 682 கி.மீ. பயணம்!
மஹிந்திராவின் பிஇ - 6 என்ற புதிய மின்னணு வாகனத்தை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமான இந்த வாகனம், ரூ. 18.90 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் முன்பதிவு செய்தவர்களுக்கு வாகனத்தை கொண்டு சேர்க்கும் பணிகளை மஹிந்திரா தொடங்கியுள்ளது.
இந்தியன் குளோபல் எனப்படும் மஹிந்திரா நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமான வடிவமைப்பின்படி, பிஇ - 6 வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
மிகுந்த சிறப்பம்சமாக 59 kWh மற்றும் 79 kWh என இரு வகையான மின்கலன்களை இந்தக் காரில் மஹிந்திரா வழங்குகிறது. இதன்மூலம் 682 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.
இதற்கு முந்தைய மின்சார வாகனங்களில் 225 குதிரைத் திறன் கொண்ட என்ஜின் மட்டுமே இருந்தது. ஆனால், பிஇ - 6 வாகனத்தில் 277 குதிரைத் திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேகத்திலும் சுமூகமான பயணத்தை உணர முடியும்.
இருபுறங்களும் எல்.இ.டி. விளக்குகள், மின்னணு கருவிகள் அடங்கிய 12.3 அங்குல தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜ் செய்யும் வசதி, தானியங்கி காலநிலை மாற்ற கட்டுப்பாட்டு கருவி, உள்ளிணைக்கப்பட்ட 5ஜி இணைய வசதி உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | மேம்படுத்தப்பட்ட செய்யறிவு (ஏஐ) அம்சங்களுடன் சாம்சங் கேலக்சி ஏ 26!