டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.85.74-ஆக முடிவு!
மும்பை: இறக்குமதியாளர்களிடமிருந்து டாலருக்கான தேவை அதிகரித்த நிலையில், இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்ததால் இன்றைய சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.85.74 ஆக முடிந்தது.
இருப்பினும் கலவையான உள்நாட்டு சந்தைகள் மற்றும் அந்நிய நிதி முதலீடுகளின் ஆதிக்கம் சற்று தளர்ந்து, இந்திய ரூபாய் கீழ்நோக்கி சென்றதால், அதன் ஏழு நாள் வெற்றிப் பயணம் நிறுத்தப்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூ.85.59 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது அதிகபட்சமாக ரூ.85.58 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.84 ஐ தொட்ட நிலையில், முடிவில் 13 காசுகள் சரிந்து ரூ.85.74-ஆக முடிந்தது.
நேற்று (திங்கள்கிழமை) வர்த்தகநேர முடிவில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 காசுகள் உயர்ந்து ரூ.85.61-ஆக இருந்தது.
இதையும் படிக்க: ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்வு!