பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
பங்குச் சந்தை: 7-வது நாளாக ஏற்றத்துடன் தொடக்கம்!
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 7-வது நாளாக செவ்வாய்க்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன், சென்செக்ஸ் 311.90 புள்ளிகள் உயர்ந்து 78,296.28 புள்ளிகளாக வர்த்தகமானது. அதேபோல், நிஃப்டியும் 93.15 புள்ளிகள் உயர்ந்து 23,751.50 ஆக வர்த்தகமாகி வருகிறது.
மேலும், காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸும் நிஃப்டியும் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுகிறது.
இதையும் படிக்க : தங்கம் விலை தொடர்ந்து குறைவு! இன்றைய நிலவரம்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வருகின்ற ஏப்ரல் 2-ஆம் தேதி புதிய வரிக் கொள்கையை அமல்படுத்தவுள்ளார். இதனிடையே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடுகள் செய்வதால் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நீடிக்கிறது.
அல்ட்ராடெக் சிமென்ட், எச்.சி.எல். டெக், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் விற்பனையாகி வருகிறது.
கடந்த 6 நாள்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.