மனோஜ் பாரதிராஜா: "கனிவான ஆன்மா... உடைந்து போனேன்" - சிலம்பரசன் இரங்கல்!
ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்வு!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து 7-வது அமர்வாக உயர்ந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் பங்குச் சந்தை ஓரளவு உயர்ந்து முடிந்தது.
வர்த்தக நேர தொடக்கத்தில் இன்று சென்செக்ஸ் 757.31 புள்ளிகள் உயர்ந்து 78,741.69 புள்ளிகளாக இருந்தது. முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்ந்து 78,017.19 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 10.30 புள்ளிகள் உயர்ந்து 23,668.65 புள்ளிகளாக நிலைபெற்றது.
நேர்மறையான உலகளாவிய குறிப்புகளின் பின்னணியில், வர்த்தக தொடக்கத்தில் நிஃப்டி 23,700 க்கு மேல் ஒரு திடமான குறிப்பில் வர்த்தகமானது. அதே வேளையில், வர்த்தகமான சில மணி நேரத்தில் நிஃப்டி 23,800 புள்ளிகளை கடந்தது சாதனை படைத்தது. இருப்பினும், முதலீட்டாளர்கள் தொடர்ந்து லாபத்தை பதிவு செய்ததால் சிறிய மாற்றத்துடன் இன்றைய வர்த்தகம் முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், இன்போசிஸ், பஜாஜ் பின்சர்வ், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
நிஃப்டியில் அல்ட்ராடெக் சிமெண்ட், ட்ரெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் இண்டஸ்இண்ட் பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் முடிந்தது.
ஐடி துறை தவிர்த்து ஆட்டோமொபைல், கேப்பிட்டல் குட்ஸ், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மெட்டல், ஆயில் & கேஸ், பவர், பொதுத்துறை வங்கி, ரியாலிட்டி, டெலிகாம் உள்ளிட்ட அனைத்து துறை பங்குகளும் 1 முதல் 1.5 சதவிகிதம் சரிந்து முடிந்தது.
அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா ஆகிய பங்குகள் விலை சரிந்து முடிந்தது. சோமேட்டோ பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதமும், இண்டஸ்இண்ட் வங்கி 5 சதவிகிதமும் சரிந்து குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.6 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.
எஸ்பிஐ கார்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஹோல்டிங்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிபிஎல் பேக்கேஜிங், கோடக் மஹிந்திரா பேங்க், சம்பல் பெர்டிலைசர்ஸ், ஜூபிடர் லைஃப் லைன் ஹாஸ்பிடல்ஸ் உள்ளிட்ட 70 பங்குகள் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.3,055.76 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் டோக்கியோ உயர்ந்தும், சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் சரிந்து முடிந்தது.
ஐரோப்பிய சந்தைகள் சாதகமாக வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) கணிசமாக உயர்ந்து முடிந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.53 சதவிகிதம் உயர்ந்து 73.39 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: அதிநவீன கண் மருத்துவமனை அமைக்க ரூ.110 கோடி முதலீடு செய்யும் சங்கரா அறக்கட்டளை!