Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
தொடர்ந்து 7-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!
தொடர்ந்து 7-வது நாளாக பங்குச் சந்தை இன்று(மார்ச் 25) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,296.28 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 10 மணியளவில், சென்செக்ஸ் 738.58 புள்ளிகள் அதிகரித்து 78,722.96 புள்ளிகளில் இருந்தது. அதன்பின்னர் சரிந்து மீண்டு தற்போது ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.
பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 45.55 புள்ளிகள் அதிகரித்து 78,029.93 புள்ளிகளில் இருக்கிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.10 புள்ளிகள் உயர்ந்து 23,685.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிக்க | தில்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி; மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500
சென்செக்ஸ் பங்குகளில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் எச்சிஎல் டெக் ஆகியநிறுவனங்களின் பங்குகள் விலை 3% வரை உயர்ந்தன.
அதேநேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.
கடந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்த நிலையில் நேற்றும்(திங்கள்கிழமை) ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.