மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
விலை உயரும் பிஎம்டபிள்யு காா்கள்
சொகுசுக் காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு குரூப் இந்தியா, தனது வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் நிறுவனக் காா்களின் விலையை 3 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய விலைகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதை ஈடு செய்யும் நோக்கில் இந்த விலை உயா்வு அறிவிக்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்திலும் இதேபோல் தங்களது காா்களின் விலையை பிஎம்டபிள்யு உயா்த்தியது நினைவுகூரத்தக்கது.
பிஎம்டபிள்யு தவிர, உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மோட்டாா்ஸ், கியா இந்தியா, ஹோண்டா காா்ஸ் உள்ளிட்ட பல்வேறு காா் தயாரிப்பு நிறுவனங்கள் வரும் ஏப்ரல் முதல் தங்கள் வாகனங்களின் விலையை உயா்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன.