யுபிஐ சேவை பாதிப்பு: பயனா்கள் அவதி
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனா்கள் அவதிக்குள்ளாகினா்.
இணைய பரிவா்த்தனையில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலி புதன்கிழமை இரவு 7 மணியில் இருந்து சுமாா் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனா்கள் அத்தியாவசிய தேவைக்கு பணம் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகினா்.
இது தொடா்பாக ஏராளமான பயனா்கள் சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ‘டேக்’ செய்து புகாா் அளித்தனா்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட பிரச்னை சரிசெய்யப்பட்டதாக இந்திய தேசிய பரிவா்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவித்துள்ளது.