அமித் ஷா மேஜையில் மாஜிக்கள் Files! சரணடைந்த எடப்பாடி?! | Elangovan Explains
அதிரடியாக உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 இன்று உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 65,560-க்கும், வியாழக்கிழமை காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.65,880-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று காலை வணிகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ. 105 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 8,340-க்கும் ஒரு சவரன் ரூ.66,720-க்கும் புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குவதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் சேமிப்பிற்காக தங்கம் வாங்கும் எளிய மக்கள் அதிர்ச்சியடைள்ளனர்.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 114-க்கும், ஒரு கிலோ ரூ. 1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: விருந்தானதா விக்ரமின் வீர தீர சூரன்? - திரை விமர்சனம்