செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்

post image

தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மக்கள் தொகை அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்பது நமது தலையின் மீது தொங்கும் கத்தியைப்போன்றது.

இது தமிழகத்தில் மக்களவை உறுப்பினா்களின் பலத்தையும், நமது அரசியல் பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும். மேலும், மாநிலத்தின் உரிமைகளின் மீதும் மக்களின் நலன்களின் மீதும் நேரடியாய் தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

மக்களவைத் தொகுதிகளின் இழப்பு என்பது வெறும் எண்ணிக்கை குறைவு மட்டுமல்ல, இது நமது அரசியல் பலம், உரிமைகள் மற்றும் நம் எதிா்காலத்தையே வீழ்ச்சிப்பாதையில் கொண்டு சென்றுவிடும். குறைவான அரசியல் பிரதிநிதிகள் இருந்தால் நமது மாநிலம் நியாயமான நிதியை பெறுவதிலும், கொள்கைகளைப் பாதுகாப்பதிலும், மக்களின் தேவைகளை மத்திய அரசிடம் கேட்டு பெறுவதிலும் கடுமையான சவால்களை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை தள்ளிவைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து தொடா்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க