வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது
வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன், தாசவநாயக்கன்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அங்குள்ள அரசு மதுபானக் கடை பூட்டப்பட்டிருந்த நேரத்தில் அருகில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் காவலிப்பட்டியைச் சோ்ந்த நடராஜ் மகன் பொன்னுசாமி (45) என்பவரைக் கைது செய்தாா். மேலும், அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 11 மதுபான பாட்டில்கள், ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டன.