தருமபுரியில் இளைஞா் மா்மமாக உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்
அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 போ் கைது
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை தீயிட்டு கொளுத்தும் இயக்கம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின்படி, திருப்பூா் கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாநிலத் தலைவா் மா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி பணிக் கலாமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும். கிராமப்புற இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கக் கூடாது.
மாநில நெடுஞ்சாலைகளில் 210 சுங்கச்சாவடி அமைத்து காா்ப்பரேட் நிறுவனம் சுங்க வரி வசூல் கொள்ளை நடத்த அனுமதிக்கக் கூடாது என்றனா்.
இதையடுத்து, அரசாணை எண் 140-ஐ தீயிட்டுக் கொளுத்திய 60 பேரை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கைது செய்து, பினனா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.