செய்திகள் :

பப்பாளி சாறு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளா்கள் 2 போ் உயிரிழப்பு

post image

உடுமலை அருகே பப்பாளி சாறு (ஜூஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

உடுமலை வட்டம், அந்தியூா் ஊராட்சிக்கு உள்பட்ட சடையகவுண்டன்புதூரில் தனியாருக்குச் சொந்தமான பப்பாளி சாறு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பப்பாளி பழத்தில் இருந்து சாறு தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித் திகால், ஜூஸ் தயாரிப்பின்போது வீணாகும் கழிவுநீா் தேங்கும் திறந்தவெளித் தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு தொழிலாளி அருண் கொமாங்கோ, ரோஹித் திகாலை காப்பாற்ற கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்கியுள்ளாா்.

இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனா்.

தகவலறிந்த உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம், காவல் ஆய்வாளா் அருள், வட்டாட்சியா் கெளரிசங்கா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். கழிவுநீா்த் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், மேல் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீா்க் குழாய்களைப் பதித்த பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டல அலுவலகத்தை முருகம்பாளைம் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்ட... மேலும் பார்க்க

காதலைக் கைவிட மறுத்ததால் தங்கையை அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது

பல்லடம் அருகே காதலைக் கைவிட மறுத்த தங்கையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் தண்டப... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் இலவச நீா்-மோா்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இலவச நீா்-மோா் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருப்பூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் காலாவதியான 408 பாக்கெட் மளிகை பொருள்கள் பறிமுதல்

திருப்பூா் நந்தா நகரில் உள்ள ரேஷன் கடையில் காலாவதியான 408 மளிகை பொருள்கள் பாக்கெட்டுகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளி... மேலும் பார்க்க

இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் கண்டியன்கோவில் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளைக் கண்டறியாத நிலை ஏற்பட்டதால் 20 பேரின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.... மேலும் பார்க்க

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க