Doctor Vikatan: இளநரைக்கு ஹென்னா உபயோகித்தால், சருமத்தில் கருமை உண்டாகுமா?
100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க அவிநாசி ஒன்றியச் செயலாளா் பி.கே.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.ஷாஜஹான், ஏஐடியூசி மாவட்டப் பொருளாளா் என்.செல்வராஜ், வழக்குரைஞா் வி.கே.சுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளா் இரா.முத்துசாமி, கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏ.ஜி.சண்முகம் ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.
மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ.700-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் ஆலத்தூா், வேட்டுவபாளையம், வேலாயுதம்பாளையம், பழங்கரை, கானூா்புதூா், தெக்கலூா், முதலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.