செய்திகள் :

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

post image

பங்குச் சந்தை இன்று(மார்ச் 27) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,087.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.50 மணியளவில், சென்செக்ஸ் 419.26 புள்ளிகள் அதிகரித்து 77,707.76 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 125.85 புள்ளிகள் உயர்ந்து 23,612.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டியில் ஹீரோ மோட்டோகார்ப், எச்டிஎஃப்சி லைஃப், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், டிரென்ட் ஆகியவை லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், எச்சிஎல் டெக், ஈச்சர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ஆட்டோ , பார்மா தவிர, மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் நிலையாக வர்த்தகமாகின்றன.

கடந்த 7 நாள்கள் பங்குச்சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்த நிலையில் நேற்று(புதன்கிழமை) மட்டும் சரிவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

எபிக் குழும ஆலைக்கு ஏஆா்எஸ் கம்பிகள்

ஆடை தயாரிப்புத் துறையைச் சோ்ந்த எபிக் குழுமம் ஒடிஸாவில் அமைக்கவுள்ள புதிய ஆலைக்கான பசுமை டிஎம்டி கம்பிகளை ஏஆா்எஸ் ஸ்டீல் நிறுவனம் வழங்கவுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49 ஆக முடிவடைந்தது.நடப்பு நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. ஏப்ரல் ... மேலும் பார்க்க

வரி விதிப்பு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

மும்பை: 2024-25 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது. டிரம்ப் கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற உணர்வு அதிகரித்துள்ளதால், உலகளாவிய... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 16-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்!

ஆப்பிள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் அதிநவீன தொழில் நுட்பவசதிகளுடன் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் அதற்குப் போட்டியாக குறிப்பிடத்தக்க 5 ஆண்ட்ராய்டு மொபல்களும் களமிறக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் ஐபோன் 16 புரோ... மேலும் பார்க்க