ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி!
நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் இணைய உள்ளதாகக் கூறப்பட்டது.
இதையும் படிக்க: டிக்கெட் முன்பதிவிலேயே ரூ. 60 கோடி வசூலித்த எம்புரான்!
மேலும், தமிழ் புத்தாண்டான ஏப். 14 ஆம் தேதி அன்று இப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோவை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.