கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி...
இணையத் தொடரில் நடிக்கும் சசிகுமார்!
நடிகர் சசிகுமார் பிரபல இணையத் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்கவுள்ளார்.
நடிகர் சசிகுமாருக்கு அயோத்தி, கருடன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததுடன் இறுதியாக வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் மை லார்ட் என்கிற படத்திலும் அறிமுக இயக்குநர் அபிஷன் இயக்கத்தில் டூரிஸ்ட் பேமிலி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதில், டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற வதந்தி இணையத் தொடரின் இரண்டாவது சீசனில் சசிகுமார் நடிக்கிறாராம்.
முதல் சீசனில் நடிகர் எஸ். ஜே. சூர்யா காவல்துறை அதிகாரியாகவும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் பாணியில் உருவான இத்தொடர் பெரிதாக வெற்றிபெறவில்லை என்றாலும் அடுத்தது என்ன என சுவாரஸ்யமான கதையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வீர தீர சூரன் டிக்கெட் முன்பதிவு மந்தம்!