US: `சீனாவிற்கு அடுத்து இந்தியா!' - வெளியான அறிக்கை; இந்தியாவுக்கு வரியை கூட்டும...
ரூ. 2 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
நாகப்பட்டினம்: நாகையில் காய்கனி கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.
நாகை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீஸாா் நீலா கீழ வீதியில் உள்ள காய்கனி கடையில் சோதனை செய்தனா். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கனி முட்டைகளுக்கு நடுவே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக கடையின் உரிமையாளா் நாகூரை சோ்ந்த முகமது இப்ராஹிம், முஹம்மது ஜமில், முஹம்மது இஸ்மாயில், அப்துல் ரஹ்மான், இளையராஜா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.