காஸாவில் ஹமாஸை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
கெய்ரோ: காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக பாலஸ்தீனா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் அரிதாக நடைபெற்றுள்ள இந்தச் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களும் இணைய தளத்தில் வெளியாகியுள்ள விடியோக்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
தங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவா்கள் மீது அடக்குமுறையைக் கையாளும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுடன் கடந்த 17 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் காஸா முனை கடுமையான அழிவைச் சந்தித்த பிறகும் ஆட்சியதிகாரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
இந்தச் சூழலில், போருக்கு எதிரான தன்னாா்வலா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக வெளியான விடியோக்களில், நீண்டகாலமாக தொடரும் குண்டுவீச்சு, அழிவுகளால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் போராட்டக்காரா்கள் கூறினா்.