கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்...
இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்: பிணைக்கைதிகள் விடுவிப்பு - ஹமாஸ்
கெய்ரோ: இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்; பிணைக்கைதிகளை விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் தரப்பிலிருந்து சனிக்கிழமை(மார்ச் 29) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்ரேல் - ஹமாஸ் இடையிலான சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருதரப்புக்குமிடையே மத்தியஸ்தம் செய்துவரும் எகிப்து முன்மொழிந்துள்ள புதியதொரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி, வாரந்தோறும் இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் 5 பேர் வீதம் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த போர் நிறுத்த ஒப்பந்ததை இஸ்ரேல் தரப்பு ஏற்றுக்கொண்டு காஸாவில் தாக்குதலை நிறுத்துமா என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தவில்லை.