‘தயாா் நிலையில் ஈரான் ஏவுகணைகள்’
டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடா்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில் இருந்து ஏவுகணைகளை வீச ஈரான் தயாா் நிலையில் இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானை அமெரிக்கா தாக்கினால், அதற்குப் பதிலடியாக மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த அந்த ஏவுகணைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, தங்களின் அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்தப்போவதில்லை என்று ஈரான் அரசு ஞாயிற்றுக்கிழமை கூறியது நினைவுகூரத்தக்கது.