டாஸ்மாக் வழக்குகளை வேறு அமா்வுக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு
தாம்பரம் - ராமேசுவரம்: பாம்பன் விரைவு ரயிலின் அட்டவணை!
தாம்பரம் - ராமேசுவரம் இடையே புதிதாக இயக்கப்படவுள்ள பாம்பன் விரைவு ரயிலின் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தை வருகிற 6 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறாா்.
இந்த நிலையில், தாம்பரம் - ராமேசுவரம் இடையே புதிதாக இயக்கப்படவுள்ள பாம்பன் விரைவு ரயில் சேவைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து நாள்தோறும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் பாம்பன் விரைவு ரயில் (16103), விழுப்புரம், சிதம்பரம், திருவாரூர், பட்டுக்கோட்டை, பரமக்குடி வழியாக மறுநாள் காலை 5.45 மணியளவில் ராமேசுவரம் சென்றடையும்.
ராமேசுவரத்தில் இருந்து நாள்தோறும் மாலை 3.35 மணிக்கு புறப்படும் மற்றொரு ரயில் (16104) மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

கடந்த வாரம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தாம்பரம் - ராமேசுவரம் இடையே பாம்பன் விரைவு ரயில் இயக்குவதற்கு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பிரதமர் மோடியால் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்த சேவை துவங்கிவைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே, சென்னை - ராமேசுவரம் இடையே இரண்டு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இது மூன்றாவது ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.