2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும்: அமித் ஷா
பாங்காக் நிலநடுக்கம்: உயிரிழப்பு 17-ஆக உயர்வு!
தாய்லாந்தின் பாங்காக்கில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து இன்று(மார்ச் 30) பாங்காக் பெருநகர அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: பாங்காக்கில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த 30 மாடிகள் கொண்ட ஓர் அடுக்குமாடிக் கட்டடம் நிலநடுக்கத்தால் சேதமடைந்து விழுந்துள்ள நிலையில், அங்கிருந்த பணியாளர்களில் 83 பேர் என்னவானார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என்றும், அவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 32 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.