இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!
மியான்மருக்கு மேலும் 60 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு: வெளியுறவு அமைச்சகம்
புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியாவிலிருந்து ‘ஆபரேசன் பிரம்மா’ பெயரில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மியான்மருக்கு இந்திய விமானப்படையின் இரண்டு சி - 17 ரக விமானங்களில் 60 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய ராணுவ மருத்துவமனை குழுவினர் 118 பேரும் அவற்றில் புறப்பட்டுச் சென்றடைந்துள்ளனர். அங்கு அவர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட உதவி நடவடிக்கைகள் மூலம், இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்தமாக மியான்மருக்கு 5 மீட்புப்படை விமானங்கள் சனிக்கிழமை(மார்ச் 29) சென்றடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.